ADDED : அக் 17, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர் செல்வம், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நாளில் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்.
சில காரணங்களால் இந்த ஆண்டு அவரை சந்திக்க முடியாமல் போனது. ரஜினியும் சினிமா படப்பிடிப்பு, இமயமலை பயணம் என 'பிஸி'யாக இருந்தார்.
இந்நிலையில் ரஜினியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று பன்னீர் செல்வம் நேரில் சந்தித்தார்.
இருவரும், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, ரஜினிக்கு, பன்னீர் செல்வம் நேரில் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.