மருத்துவமனையில் எச்.ராஜா; முதல்வர் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் எச்.ராஜா; முதல்வர் நலம் விசாரிப்பு
ADDED : பிப் 02, 2026 06:40 AM

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ராஜா, 68, உடல்நலம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கடந்த 30ம் தேதி, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றபோது, அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு சென்றார். ராஜாவின் இரண்டு மகள்களிடம், ராஜாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குளித்தலை தி.மு.க., - எம்.எல்.ஏ., மாணிக்கத்தை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி உடன் இருந்தார்.

