ADDED : அக் 29, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இன்று முற்பகல் மட்டும் இயங்கும் என்றும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, தீபாவளிக்கு மறுநாளான நவ., 1ம் தேதியும் விடுமுறையாக அறிவித்துள்ளதால், மாணவர்களுக்கு நான்கரை நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.