ADDED : நவ 29, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம், 9ம் தேதி முதல் தேர்வுகள் துவங்க உள்ளன. 6, 8ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியமும் தேர்வுகள் நடக்க உள்ளன. வரும் 9ம் தேதி தமிழ்; 10ல் விருப்ப மொழி; 12ம் தேதி ஆங்கிலம்; 16ல் கணிதம்; 18ல் உடற்கல்வி; 20ல் அறிவியல்; 23ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடக்க உள்ளன.
பத்தாம் வகுப்புக்கு, 10ம் தேதி தமிழ்; 11ம் தேதி விருப்ப மொழி; 12ல் ஆங்கிலம்; 16ல் கணிதம்; 19ல் அறிவியல்; 23ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும். பிளஸ் 1க்கு, 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை மதியமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு காலையிலும் தேர்வுகள் நடக்க உள்ளன.