ADDED : மே 30, 2024 11:10 PM

குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கோவில்களின் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ஆம் தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மே 29ஆம் தேதி பொங்கல் மாவிளக்கு மற்றும் கிடா வெட்டுதல், முத்தாலம்மன் தர ஓடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காளியம்மன் தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளிய தூக்கத்தேரினை 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து பாப்பையம்பாடி நடுப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி பொம்ம கவுண்டனூர் எல்லையம்மன் கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக மேளதாளங்களும் வழங்க வலம் வந்தனர்.
வழி நெடுங்கிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.