மீனாட்சி கோவிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா
மீனாட்சி கோவிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி: அமித்ஷா
UPDATED : ஜூன் 08, 2025 06:16 PM
ADDED : ஜூன் 08, 2025 03:31 PM

மதுரை: மதுரை மீனாட்சி கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஒத்தக்கடை பகுதியில் இன்று( ஜூன் 08) நடந்த பா.ஜ.,நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரை வந்தார். அவரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை, , மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்றார். மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமித்ஷா எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நமது குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.