சுனிதா பூமிக்கு வந்தடைந்தது மகிழ்ச்சி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சுனிதா பூமிக்கு வந்தடைந்தது மகிழ்ச்சி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 19, 2025 12:10 PM

சென்னை: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும் விண்வெளி மையத்தில் அவர்கள் தங்களது அயராது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் உடன், டிராகன் என்ற விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை சென்று அடைந்தது. இதன் மூலமாக சுனிதா வில்லியம்ஸ், புல்ட் வில்மோர், மேலும் இரண்டு விண்வெளி வீரர்களுடன் புளோரிடா அருகில் பத்திரமாக கடலில் தரையிறங்கினர். அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி நாம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கும் நமது மனதார பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.