டங்ஸ்டன் சுரங்கம் மறு ஆய்வு முடிவு மகிழ்ச்சி: துரைமுருகன்
டங்ஸ்டன் சுரங்கம் மறு ஆய்வு முடிவு மகிழ்ச்சி: துரைமுருகன்
ADDED : டிச 25, 2024 05:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியிடம் முதல்வர் இந்த பிரச்னையை எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2023ல் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்தேன். மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தில் இறங்கியது.
மக்களின் வாழ்வாதார பிரச்னையை கருத்தில் கொண்டு கனிம தொகுதிகள் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

