தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிறையில் இருந்தபடியே ஹரி நாடார் வேட்பு மனு

 சிறையில் இருந்தபடியே ஹரி நாடார் வேட்பு மனு

 சிறையில் இருந்தபடியே ஹரி நாடார் வேட்பு மனு


ADDED : ஏப் 03, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி: சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடார், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர், ஹரி நாடார், 45. இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பனங்காட்டு படை என்ற நாடார் அமைப்பின் நிர்வாகியாக இருந்தார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்றார்.

தற்போது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். இம்முறை சிறை அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி அளித்து, முகவர்கள் மூலம் ஆலங்குளத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதில், 26.76 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலையான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இ தி ல், 11.650 கிலோ தங்க நகைகள், 17.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளும் அடங்கும். 2021ல், 1.52 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆலங்குளம் தொகுதியில், ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் போட்டியிடுவதால் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வின் ஓட்டுகளில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us