தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவை குண்டு வெடிப்பை அப்பாவு மறந்து விட்டாரா?

 கோவை குண்டு வெடிப்பை அப்பாவு மறந்து விட்டாரா?

 கோவை குண்டு வெடிப்பை அப்பாவு மறந்து விட்டாரா?


ADDED : நவ 30, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்து காட்டியதற்காக, கவர்னர் ரவியை பயங்கரவாதி என அழைக்கும் அளவிற்கு, கீழ்த்தரமாக சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டுள்ளார். கடந்த 2022ல், கோவையில் நடந்த கொடூரமான தற்கொலை குண்டுவெடிப்பை, அப்பாவு மறந்துவிட்டாரா?
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா குண்டர்களால், பா.ஜ., அலுவலகங்கள், பா.ஜ., நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகளை மறந்து விட்டாரா? கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் ஆழமாக வேரூன்றிய பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவது குறித்து, என்.ஐ.ஏ., செய்திக் குறிப்புகளை, எப்போதாவது சபாநாயகர் அப்பாவு சரி பார்த்தாரா? எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 1998 கோவை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்திற்கு, தியாகி போல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது தெரியாதா? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us