ADDED : ஏப் 12, 2026 03:28 AM

சிலர் ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆகிவிட்டனர். நாம், ரெஸ்ட் எடுக்காமல் மக்களை சந்தித்து வருகிறோம். மற்றவர்கள் மாதிரி பிரேக் விட்டு, பிரேக் விட்டு பிரசாரம் செய்யவில்லை. மற்றவரைப்போல, அங்க ஒரு காலு, இங்க ஒரு காலுனு நிக்காம, திருச்சி கிழக்கில் மட்டும் தி.மு.க., வேட்பாளர் இனிகோ நிற்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என்பது ஒரே தொகுதி என்று கூட தெரியாத தற்குறி கூட்டத்திடம் என்ன பேச முடியும்?
நம் வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' எல்லாம் தெரியாது. அவர் வீட்டுக்கு உங்களை வர சொல்ல மாட்டார். அட்டை பொம்மைகள் கவர்ச்சியாக இருக்கும்; எல்லாரும் விரும்புவர்; ஆனால், காற்றடித்தால் கலைந்து போகும். கிறிஸ்துவர்களின் பிரச்னை என்னவென்று மற்றவர்களுக்கு தெரியாது. வர்றவன் போறவன் எல்லாம் தி.மு.க.,வை அழிப்பேன் என்று புதுசு, புதுசா கிளம்பி வருவானுங்க.
- உதயநிதி துணைமுதல்வர், தி.மு.க.,
