'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்
'முதல்வராக்க தயார் என சொன்னார்': நயினார் நாகேந்திரன்
ADDED : செப் 08, 2025 03:56 AM

மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் அமித் ஷா, நம் கூட்டணி சார்பில், தமிழக முதல்வர் வேட்பாளராாக யாரை அறிவிக்கிறாரோ, அவருக்காக வேலை செய்ய தயார் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஒரு காலத்தில் பேசினார். தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் எங்கள் அனைவரின் நோக்கம்.
ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தால் லட்சியம் நிறைவேறும். இதை தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறினால், அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரணமாக ஒரு குடும்பத்திலேயே எவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க நான் தயார்.
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர், கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.