உறுதியாக சந்திப்பேன் முயற்சிக்கு வாழ்த்துகள்: ஓபிஎஸ்
உறுதியாக சந்திப்பேன் முயற்சிக்கு வாழ்த்துகள்: ஓபிஎஸ்
ADDED : செப் 08, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன், முயற்சி மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு என் முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.
அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள். அவர், 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதன்பின், பிரிந்து சென்ற அனைவரையும் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். நானும் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரிடமும் சமாதானம் பேசத் தயார் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார். அவரது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்.
- -- பன்னீர்செல்வம்
ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு