மலிவு விலையில் காது கேட்கும் கருவிகளை வழங்கும் 'ஹியர்சாப்'
மலிவு விலையில் காது கேட்கும் கருவிகளை வழங்கும் 'ஹியர்சாப்'
ADDED : செப் 26, 2024 02:12 AM
சென்னை:நாடு முழுதும் உள்ள, 130க்கும் அதிகமான கடைகளில், மலிவு விலையில் காது கேட்கும் கருவிகளை, ஹியர்சாப் நிறுவனம் வழங்கி வருகிறது.
கடந்த 47 ஆண்டுகளாக, காது கேளாமை பிரச்னைக்கு டிஜிட்டல் கருவிகள் வாயிலாக, ஹியர்சாப் நிறுவனம் சேவையாற்றி வருகிறது. இந்நிறுவனத்திற்கு நாடு முழுதும், 130க்கும் அதிகமான கடைகள் உள்ளன.
காது கேளாமை பிரச்னைக்கு தீர்வளிக்கும் உயர்தர காது கேட்கும் கருவிகளை, அனைத்து தரப்பினரும் எளிதாக வாங்கும் வகையில், மலிவு விலையில், இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற காது கேட்கும் கருவி களான பிலிப்ஸ், ரெக்ஸ்டான் பிராண்டு களின் பார்ட்னராகவும், இந்த நிறுவனம் உள்ளது.
செவித்திறன் தொழில்நுட்பத்தில், சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள கருவிகளை, அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் உறுதியுடன் இருப்பதாக, ஹியர்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுாரில், தங்கள் நிறுவனம் பரந்து விரிந்து சிறப்பான சேவையை வழங்கி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஹியர்சாப் நிறுவனம் உறுதி அளித்துஉள்ளது.

