தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்: வானிலை மையம் தகவல்
ADDED : ஏப் 10, 2025 09:51 PM

சென்னை: தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாகி வரும் நிலையில், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது முக்கியமான தேவையாகி விட்டது. இன்றும் தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோட்டில் 104, திருச்சியில் 102, சென்னையில் 101, திருத்தணியில் 102, நாகப்பட்டினம், கரூர், மதுரை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது.
மற்ற இடங்களில் பதிவான வெயில் நிலவரம்:
அதிராமபட்டினம்- 96.08 டிகிரி பாரன்ஹீட்,
கோவை- 93.2 டிகிரி பாரன்ஹீட்,
குன்னூர்- 74.84 டிகிரி பாரன்ஹீட்
கடலூர்- 98.96 டிகிரி பாரன்ஹீட்
தர்மபுரி- 98.6 டிகிரி பாரன்ஹீட்
கன்னியாகுமரி- 89.6 டிகிரி பாரன்ஹீட்
கொடைக்கானல்- 71.42 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை- 91 டிகிரி பாரன்ஹீட்
பாம்பன்- 95 டிகிரி பாரன்ஹீட்
பரங்கிப்பேட்டை- 93.2 டிகிரி பாரன்ஹீட்
சேலம்- 96 டிகிரி பாரன்ஹீட்
திருப்பத்தூர்- 96.2 டிகிரி பாரன்ஹீட்
தொண்டி- 93 டிகிரி பாரன்ஹீட்
தூத்துக்குடி- 93.2 டிகிரி பாரன்ஹீட்
ஊட்டி-71.6 டிகிரி பாரன்ஹீட்
வால்பாறை- 80 டிகிரி பாரன்ஹீட்