ADDED : மார் 07, 2025 07:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் ஆறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் என கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று( மார்ச் 07) ஐந்து இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
வெப்பநிலை( வெப்பநிலை டிகிரி பாரன்ஹீட்டில்)
அதிகபட்சமாக
கரூர் பரமத்தி - 102.2
திருப்பத்தூர் -101.3
திருப்பூர் -101.3
ஈரோடு -100.76
மதுரை விமான நிலையம் - 100.4
நாமக்கல் - 100