ADDED : டிச 28, 2025 08:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், வார விடுமுறை நாளான இன்று, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குவிந்தனர்.
கோவிலில், ஆறு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள், பார்க்கிங் செய்ய இடமின்றி, தேரடி வீதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன.
இதனால் திருவண்ணாமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோக்களில் ஒரு கிலோ மீட்டருக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணமாக நிர்ணயித்து, கிரிவலம் செல்லும் பக்தர்களிடம், 14 கி.மீ., துாரத்திற்கு, 2,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை வசூலித்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

