நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக 13 லட்சம் பேர் பயன்!
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக 13 லட்சம் பேர் பயன்!
ADDED : டிச 28, 2025 08:21 PM

சென்னை: 'உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வழியே, 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், மிக சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன்பெறுகின்றனர்' என்று தெரிவித்திருந்தார். அதை மேற்கோள் காண்பித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
உங்களை தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து, 'உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் வழியே, நேற்று முன்தினம் வரை, 13 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றால், துவக்க நிலையிலேயே பல லட்சம் மக்களின் பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் உயிர் காத்துள்ளோம்.
முகாம்களிலேயே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, மக்களின் துயர் துடைத்துள்ளோம். நலம் பெற்றவர்களின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

