sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம்: பயனாளிகள் தேர்வு முகாம்


ADDED : அக் 13, 2023 11:30 PM

Google News

ADDED : அக் 13, 2023 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.

தையல் ஆசிரியை மணிமொழி மாற்றுத்திறனாளிகள் தையல்திறன் குறித்து ஆய்வு செய்தார். இதில் தையல் தொழில் திறன் அனுபவத்தின் அடிப்படையில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us