ADDED : ஜூன் 19, 2026 02:07 AM

சென்னை: 'தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவண்ணா மலை மாவட்டம், அரட்டவாடி பகுதியில் 13 செ.மீ., மழை பெய்து உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை, தெலுங்கானா, ஆந்திரா வழியாக வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர்.
திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணா மலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
