ADDED : மே 22, 2026 07:36 AM
சென்னை: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
மத்திய வங்கக் கடல் முதல் தமிழகம் வரை, தென் மேற்கு வங்கக் கடல் வழியாக வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலுார், திருப்பத்துார், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இயல்பான வெப்ப நிலை காணப்படும். கடலோர மாவட்டங்களில், வரும் 25 வரை அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்ட மாக காணப்படும்; ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை, 42 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
