தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 7 மாவட்டங்களில் இன்று கனமழை

7 மாவட்டங்களில் இன்று கனமழை

7 மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஏப் 05, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 02:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

தமிழகத்தில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில், அதிகபட்சமாக, தலா, 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஏப்ரல், 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us