8 மாவட்டங்களில் இன்று கனமழை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
8 மாவட்டங்களில் இன்று கனமழை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
ADDED : மே 24, 2025 06:30 AM

சென்னை: தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இதில் கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
மத்திய கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கொங்கன் கரைக்கு அப்பால், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுவடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல், 27 வரை, இடி மின்னலுடன், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரியில் ஒருசில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை கன முதல் அதிகன மழையும், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில், கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழையும் பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

