ADDED : மே 01, 2026 01:43 AM

சென்னை: 'தமிழகத்தில், கோவை, நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 7 செ.மீ., மழை பெய்து உள்ளது.
தெற்கு உள் கர்நாடகா முதல், தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி யில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
