நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் தகவல்
நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் தகவல்
UPDATED : அக் 24, 2024 08:25 AM
ADDED : அக் 24, 2024 06:36 AM

சென்னை: வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், சேலம் முதல் கோவை வரையிலான, ஒன்பது மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
'டானா' புயல், வட மேற்கு வங்கக் கடலில் தீவிர புயலாக மாறும். இந்த புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை, ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதியில், பூரி - சாகர் தீவுகள் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
'டானா' புயல் காரணமாக, வங்கக்கடலில் பல்வேறு இடங்களில், அதிகபட்சமாக மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
தர்மபுரி மாவட்டம்
ஒகேனக்கல் வனப்பகுதி 67
பாலக்கோடு 48.4
மாரண்டஹள்ளி 27
தர்மபுரி 20
பென்னாகரம் 16
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் 102
சூலங்குறிச்சி 51
மணிமுத்தாறு அணை 47
கள்ளக்குறிச்சி 35
மூங்கில் துறைப்பட்டு 31
திருக்கோவிலூர் 24
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலவரப்பள்ளி அணை 120
கிருஷ்ணகிரி 102.3
பரூர் 71
ஜம்பு குட்டப்பட்டி 57.2
கே ஆர் பி அணை 54.4
நெடுங்கள் 51.2
தேன்கனிக்கோட்டை 49
பாம்பாறு அணை 48
தளி 40
சூளகிரி 35
ஊத்தங்கரை 31.2
சின்னாறு அணை 30
ஓசூர் 29.4
கோவை மாவட்டம்
மாக்கினாம்பட்டி 70
சின்கோனா 59
வால்பாறை பிஏபி 43
வால்பாறை தாலுகா ஆபிஸ் 41
பெரியநாயக்கன்பாளையம் 38
மேட்டுப்பாளையம் 36
சின்னக்கல்லார்28
சூலூர் 24
சிறுவாணி அடிவாரம் 24
அன்னூர் 22
பொள்ளாச்சி 20
சேலம் மாவட்டம்
டேனிஷ் பேட்டை 47
ஆத்தூர் 46
ஏற்காடு 26.4
ஏத்தாப்பூர் 15
தேனி மாவட்டம்
சோத்துப்பாறை 54
பெரியகுளம் 50.2
சண்முக நதி 41.6
வீரபாண்டி 36.2
ஆண்டிப்பட்டி 33
அரண்மனைபுதூர் 30.6
மஞ்சளார் 24
வைகை அணை 23.2
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி 110
கடம்பூர் 48
கயத்தார் 44
கழுகுமலை 33
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் 100.2
வாணியம்பாடி 73
ஆலங்காயம் 28