தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 9 மாவட்டங்களில் இன்று கனமழை

9 மாவட்டங்களில் இன்று கனமழை

9 மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : அக் 17, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட ஒன்பது மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் ஊத்து பகுதியில், 15, காக்காச்சியில், 14; மாஞ்சோலையில், 11; துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 9; ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, அம்பாசமுத்திரம், சென்னை மேடவாக்கம் பகுதியில், 8; புதுக்கோட்டை மணமேல்குடியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 23 வரை மிதமான மழை தொடரலாம்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us