தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


ADDED : மே 27, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 02:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வட மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் மத்திய கிழக்கு தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்று

நீலகிரி

கோவை

கரூர்

சேலம்

நாமக்கல்

தர்மபுரி

கிருஷ்ணகிரி

கன்னியாகுமரி

மதுரை

திண்டுக்கல்

தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

நாளை (மே 28)

நீலகிரி

கோவை

திருப்பூர்

திண்டுக்கல்

தேனி

வேலூர்

திருப்பத்தூர்

கிருஷ்ணகிரி

தர்மபுரி

சேலம்

ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

மே 29 ம் தேதி

வேலூர்

திருப்பத்தூர்

கிருஷ்ணகிரி

தர்மபுரி

ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

வெப்பநிலை

இன்று முதல் 29 வரை வட உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைழ தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us