ADDED : செப் 30, 2026 03:06 AM

சென்னை: தமிழகத்தில் இன்று, 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நீலகிரி, ஈரோடு, சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கரூர், விழுப்புரம், கடலுார்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
