ADDED : ஜூன் 20, 2026 04:20 AM

சென்னை: 'தமிழகத்தில், இன்று ஐந்து மாவட்டங்களில், இடி, மின்னலுடன், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில ம் கிழக்கு விதர்பா முதல், தமிழகம் வரை, தெலுங்கானா, ஆந்திரா வழியாக, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
