ADDED : பிப் 22, 2026 06:12 AM

சென்னை: 'மதுரை, விருதுநகர் உட்பட நான்கு மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக,
நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் உருவாகி உள்ளது; இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று வலுப்பெறும்.
இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை முதல், 25ம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை, வரும் 25ம் தேதி வரை, படிப்படியாக உயரும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

