தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழகத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம், கின்னக்கோரை பகுதியில், அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், 7; கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலுாரில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்கள மற்றும் புதுச்சேரியில், இன்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில், நாளை மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us