4 நாட்களுக்கு கனமழை வார்னிங்; அலர்ட் கொடுத்த வருவாய் நிர்வாக ஆணையர்
4 நாட்களுக்கு கனமழை வார்னிங்; அலர்ட் கொடுத்த வருவாய் நிர்வாக ஆணையர்
ADDED : டிச 08, 2024 10:25 PM

சென்னை: கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10ம் தேதி; மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். .11ம் தேதி ; காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
13ம் தேதி: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
13ம் தேதி;மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்டிச, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையர் மோகனசந்திரன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.