தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
UPDATED : ஜன 23, 2026 10:18 PM
ADDED : ஜன 23, 2026 02:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 24) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கடலூர்
நாளை மறுநாள் (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி,
* பெரம்பலூர்,
* கள்ளக்குறிச்சி,
* திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

