இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
ADDED : நவ 18, 2024 02:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
* திருநெல்வேலி,
* கன்னியாகுமரி,
* நாகை,
* தஞ்சை,
* சிவகங்கை,
* புதுக்கோட்டை,
* ராமநாதபுரம்,
* மயிலாடுதுறை,
* திருவாரூர்,
* துாத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் (நவ.,18), நாளையும் (நவ.,19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.