UPDATED : நவ 30, 2024 06:43 AM
ADDED : நவ 30, 2024 06:29 AM

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு தென் கிழக்காக 190 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள பெஞ்சல் புயல் மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது, இன்று பிற்பகல் புதுச்சேரி அருகே புயல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிக்காக 100க்கும் அதிகமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன.வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டுள்ளது.
னெ்னை மெரினா மற்றும் காசி மேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் கடல் பக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கடக்கும் போது ஈசிஆர் மற்றும் ஓ எம் ஆர் சாலையில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 7 செமீ மழை பதிவாகி உள்ளது.