கனமழை எதிரொலி; உயர்கிறது முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம்!
கனமழை எதிரொலி; உயர்கிறது முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம்!
ADDED : மே 27, 2025 09:27 AM

கோவை: கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், நேற்று 26.6 அடியாக இருந்தது. கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியை தாண்டியது.
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், நேற்று 26.6 அடியாக இருந்தது. கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 49.53 அடி. கேரளா அரசு உத்தரவுப்படி, அணையில் 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்.
இன்றைய பொள்ளாச்சி அணை நிலவரம்
சோலையார் அணைநீர்மட்டம்:45.15/160 அடிநீர்வரத்து:4515.74க.அடி
பரம்பிக்குளம்நீர்மட்டம்:30.75/72 அடி
நீர்வரத்து:4745க.அடி.
வெளியேற்றம்:70க.அடி
ஆழியார் அணை: நீர்மட்டம்:78.60/120அடி.
நீர்வரத்து:896க.அடி.
வெளியேற்றம்:61க.அடி.
உடுமலை அணை நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:55.75/60அடி
நீர்வரத்து:897கனஅடி
வெளியேற்றம்:1150கன அடி
மழையளவு:28மி.மீ
அமராவதி அணை
நீர்மட்டம்:57.58/90அடி.
நீர்வரத்து:4006கனஅடி
வெளியேற்றம்:18கன அடி.
மழையளவு:23மி.மீ.,