ADDED : ஆக 25, 2026 12:41 AM

சென்னை: 'கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்று, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில், ஒரு சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று, மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
