கோவை, திருப்பூரில் கொட்டியது கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கோவை, திருப்பூரில் கொட்டியது கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
UPDATED : அக் 22, 2024 11:24 PM
ADDED : அக் 22, 2024 11:20 PM

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (அக்.,22) செவ்வாய் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் இன்று (அக்.,22) மாலை 5 மணி முதல் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தீபாவளிக்காக கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கோவை விமான நிலையத்தில் இன்று (அக்.,22) மாலை பெய்த மழை அளவு 70 மில்லி மீட்டர் என்ற அளவில் பதிவானது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தம்பாளையத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு கார்களை பொதுமக்கள் மீட்டனர். அவற்றில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். புதன்கிழமையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்பதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

