தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை: மின் தாக்குதலில் ஒருவர் பலி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை: மின் தாக்குதலில் ஒருவர் பலி
ADDED : ஏப் 07, 2025 09:20 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெப்பச் சலனம் காரணமாக, வெவ்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
கன்னியாகுமரி (பெருஞ்சாணி)- 83
புத்தன் அணை- 80.8
ஏழுமலை- 80.6
கல்லிக்குடி- 68.4
அரவக்குறிச்சி- 68
காரியாபட்டி- 64.2
உசிலம்பட்டி- 60
எருமப்பட்டி- 60
சண்முகநதி- 57.4
அடையாமடை- 55.4
மதுரை விமான நிலையம்- 54.6
சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்)-54.6
சுருளகோடு- 54.2
கிருஷ்ணராயபுரம்-53.5
மதுரை-52
சோழவந்தான்-51
அரண்மனைபுதூர்- 50.4
எடப்பாடி-50.2
பெரியகுளம்- 50.2
ஆனைப்பாளையம்- 48
சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகம்- 46.8
உத்தமபாளையம்- 46.3
கோவிலாங்குளம் - 45.4
திண்டுக்கல்- 44
ஸ்ரீவில்லிபுத்தூர்-42.1
விருதுநகர்- 42.2
தாலுகா அலுவலகம், பொள்ளாச்சி- 40
பெரியபட்டி- 38.2
பேரையூர்- 36.6
திருச்சி- 36.6
பழனி-36
தாலுகா அலுவலகம் ஆண்டிப்பட்டி- 36
நிலக்கோட்டை- 35.2
கல்லாந்திரி-35
வாடிப்பட்டி-35
திருமங்கலம்- 34.6
மதுரை வடக்கு-33.4
சாத்தூர்- 32
அவிநாசி- 32
க.பரமத்தி- 30.6
நத்தம்- 30.5
பரமத்தி வேலூர்- 30
ஆண்டிபட்டி- 29.6
வீரபாண்டி- 28.2
குமாரபாளையம்- 26.2
தல்லாகுளம்- 26
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழை, சூறாவளிக்காற்று காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு
மதுரை மாநகரில் நேற்று இரவு பெய்த கனமழையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. தீக்கதிர் அருகேயுள்ள காமராஜர் பாலத்தின் கீழ் தேங்கிய நீரில், விளாங்குடியை சேர்ந்த ஜெயக்குமார் (65) என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஜெயக்குமார் மது போதையில் சென்றதால் தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.