கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
UPDATED : டிச 01, 2024 12:23 AM
ADDED : டிச 01, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்உ பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மணிக்கு 70 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசிய காற்றின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.