உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 19, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். இதற்காக, திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த ராகுல், அங்கிருந்து துறையூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
பிரசாரக் கூட்டத்துக்கு ராகுல் சென்ற பின், துறையூர் ஜெமீன்தார் பள்ளி மைதானத்தில் நிறுத்தப் பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசாரம் செய்த ராகுலுக்கு, முஸ்லிம் ஒருவர் குர்ஆன் புத்தகத்தை பரிசாக வழங்கினார். ராகுலுக்கு, சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம், வெள்ளி வேல் பரிசாக வழங்கினார். மேலும், அம்பேத்கர் சிலையும் ராகுலுக்கு அளிக்கப்பட்டது.
