திருநங்கையர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவி மையம்
திருநங்கையர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவி மையம்
ADDED : நவ 21, 2025 11:32 PM
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் போது முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் பங்கேற்பை கவனத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக தேவையான வசதிகளை செய்யவும், இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தற்போது வரை, 4.81 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 9,464 திருநங்கையர் வாக்காளர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருநங்கையர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்கு தேவையான உதவிகள், தன்னார்வலர்கள் வாயிலாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் 9ம் தேதி துவங்கும் உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனை கூட்டத்தின்போது, அடையாள அட்டை இல்லாத திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக, உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

