sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஹெபடைடிஸ் பி, சி' தொற்றுகளால் 187 நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம்

/

'ஹெபடைடிஸ் பி, சி' தொற்றுகளால் 187 நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம்

'ஹெபடைடிஸ் பி, சி' தொற்றுகளால் 187 நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம்

'ஹெபடைடிஸ் பி, சி' தொற்றுகளால் 187 நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம்


ADDED : ஜன 18, 2025 09:57 PM

Google News

ADDED : ஜன 18, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கல்லீரல் அறக்கட்டளை சார்பில், இந்திய கல்லீரல் அழற்சி நோய் குறித்த இரண்டு நாள் மாநாடு, சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ரோடெரிகோ ஆப்ரின் பேசியதாவது:

கல்லீரல் செல்கள் சேதமடைந்தாலோ அல்லது தொற்றுக்கு உள்ளானாலோ அழற்சி ஏற்படுகிறது. அதனால், வீக்கமும், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்பும் உருவாகிறது.

ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ, வகை தொற்றுகள் குறைந்த காலமும், நாள்பட்ட வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு மற்றும் புற்று நோய்க்கு வழிவகுக்கின்றன.

உலகில், 187 நாடுகளில் கல்லீரல் அழற்சியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது, புள்ளிவிபரங்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

அவற்றில், 83 சதவீத உயிரிழப்புகள் 'ஹெபடைடிஸ் பி' தொற்றாலும், 13 சதவீத உயிரிழப்புகள் 'ஹெபடைடிஸ் சி' தொற்றாலும் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டுமே தடுக்கக்கூடிய பாதிப்புகள் தான்.

துவக்க நிலை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால், கல்லீரல் அழற்சி தீவிரமடையாமல் தடுக்க முடியும். உலகம் முழுதும் 2.9 கோடி பேர் 'ஹெபடைடிஸ் பி' பாதிப்புக்கும், 5 லட்சம் பேர் 'ஹெபடைடிஸ் சி' பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி ஆகிய மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதை இந்தியாவும் உணர்ந்து செயல்பட வேண்டும். கல்லீரல் அழற்சியை, 2030க்குள் வேரறுப்பதற்கான இலக்கை அடைவதற்கான காலம் வெகு துாரத்தில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us