டேய் தகப்பா, என்னடா இதெல்லாம்; தந்தை கருத்துக்கு அஸ்வின் பதில் இதுதான்
டேய் தகப்பா, என்னடா இதெல்லாம்; தந்தை கருத்துக்கு அஸ்வின் பதில் இதுதான்
UPDATED : டிச 19, 2024 11:06 PM
ADDED : டிச 19, 2024 07:51 PM

சென்னை: இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்காமல் அவமதிக்கப்பட்டதே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஆல் ரவுண்டராக, 14 ஆண்டு காலம் வலம் வந்தவர் அஸ்வின் ரவிச்சந்திரன். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் போட்டித் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தன் மகன் ஓய்வு அறிவிப்பு பற்றி அவரது தந்தை ரவிச்சந்திரன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ''அஸ்வின் திடீர் ஓய்வு அறிவிப்பு, அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் தொடர்ந்து அவமதிக்கப்பட்டதால், நாங்களும் அவரது ஓய்வு அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு காலத்துக்குத்தான் அவர் அவமதிப்பை பொறுத்துக் கொண்டிருப்பார்,'' என்று கூறியிருந்தார்.இது, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் தந்தையின் கருத்தை, பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளத்தில் அஸ்வின், 'என் தந்தை மீடியா அறிமுகம் இல்லாதவர். டேய் தகப்பா என்னடா இதெல்லாம். இப்படியெல்லாம், தந்தைகள் பேசும் வழக்கத்தை நீயும் பின்பற்றுவாய் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவரை மன்னித்து, தனியாக இருக்க விடுங்கள்' என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.