ADDED : ஏப் 19, 2026 03:09 AM
விருதுநகர்: விருதுநகர் மார்கெட்டில் மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.6200, க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.3250, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ.1000 முதல் ரூ.2000 குறைந்து ரூ.22,000 முதல் ரூ.27,000 என விற்கப்படுகிறது.
இங்கு ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6270, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.70 குறைந்து ரூ.2330, ரவை 30 கிலோ ரூ.1500, மைதா 90 கிலோ ரூ.4450, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.2150, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.250 குறைந்து ரூ.4000, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ.5850 என விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.11,400 முதல் ரூ.12,200, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.9500 முதல் ரூ.9600, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.10,100 முதல் ரூ.10,400, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.6900 முதல் ரூ.7100 என விற்கப்படுகிறது.
உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.7500 முதல் ரூ.7900, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.9500, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.6500 முதல் ரூ.7100 என விற்கப்படுகிறது.
பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7700 முதல் ரூ.8000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ.19,000 முதல் ரூ.22,600, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4300 முதல் ரூ.4350, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.5900, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2200 என விற்பனை செய்யப்படுகிறது.
