sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு உயர் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

/

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு உயர் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு உயர் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு உயர் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு


ADDED : ஜன 02, 2025 11:06 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற, மதுரையில் ஜன., 5ல் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை ஒத்திவைத்தது.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த மனு:

தமிழக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரின் செயல்கள், பேச்சுக்கள் பிராமண சமூகத்திற்கு எதிராக உள்ளன. பல நாத்திகக் குழுக்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை உடல் ரீதியாக தாக்கும் நிலைக்கு சென்று உள்ளனர்.

பிராமண சமூகம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது என்பது போல திட்டமிட்டு சில ஊடகங்கள், சினிமாவில் தவறாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறது. பிராமணர்கள் கடைபிடிக்கும் சனாதன தர்மத்தை மலேரியா, டெங்குபோல் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசின் அதிகார பலமிக்க அமைச்சர் ஒருவர் பேசினார்.

இது, பிராமண சமூகத்தை பற்றி பலரும் தவறாக பேச ஊக்குவித்து உள்ளது.

முக்கிய பதவி வகிக்கும் நபர்களின் இத்தகைய விமர்சனங்கள், விரும்பத்தகாத கருத்துகள் மற்றும் அவதுாறு பிரசாரங்களை அரசு தடுக்கவில்லை; மவுனமாக உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரிய சலுகையை தமிழகத்தில் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பிராமண சமூகம் தான்.

பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜன., 5ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸ் கமிஷனர், சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.

அரசு தரப்பு: கோவையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையானது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.

நீதிபதி: மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரத்தையும், சட்டத்திற்கு உட்பட்டு சுமுகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் இன்று தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தினார்.

-நமது நிருபர் -






      Dinamalar
      Follow us