தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : பிப் 11, 2025 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க தடை இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில், தண்டனை கைதிகளாக உள்ள திருகுமரன், சின்னத்துரை, தங்கப்பாண்டி, ரமேஷ் மற்றும் ஜோதிமுருகன் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

மாறுபட்ட உத்தரவு


இந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, விடுப்பு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த, 'டிவிசன் பெஞ்ச்' மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

இதையடுத்து இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், டி.வி.தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அமர்வு சில கேள்விகளை எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதாடியதாவது:

மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க, சிறை அலுவலர்களுக்கு தடை எதுவும் இல்லை.

சிறை தண்டனை என்பது, கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கிய நாளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

இது தவிர, தண்டனை கைதிகள் மீது வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தால், விடுப்பு வழங்க முடியாது. விடுப்பு வழங்குவது குறித்த அனைத்து விதிகளுக்கும் விலக்களிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் வாதாடினார்.

தகுதியில்லை


அதை ஏற்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கைதிகளின் மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தண்டனை கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க, எந்த தடையும் இல்லை.

விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும் போது, விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள், தண்டனைக்கு முன் சிறையில் இருந்த நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தண்டனை கைதிகளுக்கு எதி ராக, வேறு வழக்கு விசாரணை யில் இருந்தால், அந்த கைதி விடுப்பு பெற தகுதியில்லை.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us