sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு

/

பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு

60


UPDATED : பிப் 20, 2026 03:02 PM

ADDED : பிப் 20, 2026 11:07 AM

Google News

60

UPDATED : பிப் 20, 2026 03:02 PM ADDED : பிப் 20, 2026 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நியமன முறைகேடு வழக்கில், தமிழக அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்துள்ளதாக , அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதங்களை அனுப்பியது . வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் , டிஜிட்டல் கருவிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் அடிப்படையில் இந்த புகார் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

அமலாக்கத்துறை அனுப்பிய புகார் கடிதங்களின் அடிப்படையில் , அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக தரப்பில் ராஜ்யசபா எம்பி இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 20) தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை கடிதம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ''அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

* அமலாக்கத்துறை ஆதாரங்களில் முகாந்திரங்கள் உள்ளன. புகார் அளித்தும் தாமதமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையை உடனே துவங்க வேண்டும் .

* சுதந்திரமாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ள இந்த விவகாரம், திமுகவுக்கும் அமைச்சர் நேருவுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சட்ட ரீதியாக சந்திப்போம்

சென்னையில் அமைச்சர் நேரு, ஆர்எஸ்பாரதி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்எஸ்பாரதி கூறியதாவது: அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம். எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதற்கே அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. வழக்கை எதிர்கொள்ள திமுக சட்டத்துறை தயாராக உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சி மீதான நற்பெயரை கெடுக்க சதி நடக்கிறது.கேஎன்நேரு அச்சுறுத்தலுக்கு பயப்படுகிறவர் அல்ல. துன்புறுத்தினால் தீவிரமாக பணியாற்றுவார். 41 தொகுதிகளின் பொறுப்பாளராக கேஎன்நேரு நியமிக்கப்பட்டதால் அவரை முடக்க பாஜ முயற்சி செய்கிறது. இவ்வாறு ஆர்எஸ்பாரதி கூறினார்.



நேரு பேட்டி

அமைச்சர் நேரு கூறுகையில், ''நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த வழக்கிலும் எந்த குற்றமும் செய்யவில்லை என நிரூபித்து வெளியே வருவேன்'' என தெரிவித்தார்.



அமலாக்கத்துறை கடிதத்தில் கூறியிருப்பது என்ன?






      Dinamalar
      Follow us