பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க கட்டணம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க கட்டணம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
UPDATED : ஜூன் 18, 2025 05:08 PM
ADDED : ஜூன் 18, 2025 05:06 PM

சென்னை: பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்., 21க்குள் அகற்ற ஐகோர்ட் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. ஏனெனில், பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொடிக்கம்பம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜன.,யில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மேலும், கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஜூலை 2க்குள் கொடிக்கம்பங்கள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டியது வரும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் வாடகை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.