sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

52


UPDATED : ஏப் 23, 2025 04:11 PM

ADDED : ஏப் 23, 2025 03:28 PM

Google News

UPDATED : ஏப் 23, 2025 04:11 PM ADDED : ஏப் 23, 2025 03:28 PM

52


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:

* பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

* சைவ, வைணவ சமய குறியீடுகளை பயன்படுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசியது ஏற்க முடியாது.

* வெறுப்பு பேச்சை சகித்துக் கொள்ள முடியாது.

* உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக போலீசார் அமல்படுத்தவில்லை. நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.

* சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

* சைவ சமயத்தின் விபூதி, பட்டையும், வைணவத்தின் நாமமும் புனிதமானது.

* புனிதமான பட்டை, நாமத்தை விலைமாது சேவையுடன் அமைச்சர் பொன்முடி ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

* மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் பொன்முடி பேசி உள்ளார்.

* ஆபாசம் மட்டுமல்ல. இரண்டு சமய மக்களையும் புண்படுத்தும் வகையில் பொன்முடி பேசி இருக்கிறார்.

* அமைச்சராக இருப்பதால் பொன்முடிக்கு போலீசார் சலுகை வழங்க முடியாது.

* பேசியதை அமைச்சர் பொன்முடி ஒப்புக்கொண்டு உள்ளார். கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்?என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ''பொன்முடி சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us